இந்த அரசாங்கத்துக்கு ரூபாவை நிருவகிக்கவும் முடியாதுள்ளது, நாட்டை நிருவகிக்கவும் தெரியாதுள்ளது, கொழும்பு குப்பைகளை நிருவகிக்கவும் இயலாத ஒரு நிலையில் காணப்படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சுகதுக்கங்களை விசாரிக்க கேகாலை சிறைச்சாலைக்கு சென்றுவிட்டு நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.