நா. முத்துகுமார் குடும்பத்துக்கு தாணுவின் உதவி
பாடலாசிரியர் நா. முத்துக்குமார் அவர்களின் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையில் அவருடைய மரணத்திற்கு தவறான காரணங்கள் வருவதால் அவருடைய தம்பி ஒரு கடிதமும் எழுதி வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் முத்துகுமாரிடம் நிறைய பவுன்ஸ் ஆன செக்குகள் குறித்த தகவல்கள் வெளியாகி இருந்தது.
இதுகுறித்து தயாரிப்பாளர் தாணு, முத்துக்குமார் குடும்பத்தினரிடம், பவுன்ஸ் ஆன செக்குகள் குறித்த தகவல்களை தன்னிடம் கொடுத்தால், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த பணத்தை வாங்கித்தர தான் உதவுவதாக அவர் கூறியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.