முல்லைத்தீவு கொக்கிளாயிலிருந்து, முல்லைத்தீவு நகருக்கு பயணித்த கெப் ரக வாகனமொன்று நேற்று (08) மாலை நாயாறு பாலத்திற்கு அருகில் நாயாறு களப்பில் கவிழ்நது விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அவர்கள் முல்லைத்தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாகனத்தின் வேகத்தை கட்டுபடுத்த முடியாமல் போனதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

