ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இணைக்கும் முயற்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷவும் பிரசன்ன ரணதுங்கவுமே தடையாகவுள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர குற்றம் தெரிவித்தார்.
உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றிணைத்துவிட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விரும்பினார். கட்சியை ஒன்றிணைப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறும் அவர் கட்சி உறுப்பினர்களைப் பணித்திருந்தார்.
அவரது முயற்சிக்கு ஸ்ரீல.சு.க. உறுப்பினர்கள் பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். எனினும் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோரின் தடைகளினாலேயே கட்சிகளிடையிலான இணைப்பு சாத்தியமற்றதாகிப் போய் வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.