உயிர்த்தியாகத்துடன் மீட்டெடுத்த நாட்டை பிளவடையச் செய்ய அரசாங்கம் முயற்சிக்கின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், ”நல்லிணக்கம் ஏற்படுத்துவதாகக் கூறி அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்க உள்ளது. படைவீரர்கள் உயிர்த் தியாகத்துடன் மீட்டெடுத்த நாட்டை பிளவடையச் செய்ய முயற்சிக்கின்றது.
பிரபாகரன் போர் செய்து பெற்றுக்கொள்ள முயற்சித்தவற்றை அரசியல் அமைப்பின் ஊடாக வழங்கப்பட உள்ளது.
மதத் தலைவர்களை இழிவுபடுத்தும் ஓர் நிலைமை உருவாகியுள்ளது. அரசாங்கம் ஜனநாயகத்தை நிலைநாட்டியதாக கூறுகின்றது. உண்மையில் அரசாங்கம் ஜனநாயகத்தை சீர்குலைத்துள்ளது.
பிரதமர் நியமிக்கப்பட்ட விதம், பிரதம நீதியரசர் நியமிக்கப்பட்ட விதம் சர்ச்சைக்குரியது. எதிர்வரும் தேர்தலில் இந்த அரசாங்கத்தை தோற்கடிக்கச் செய்ய வேண்டும்.
எந்த தரப்புடனும் எனக்கு டீல் கிடையாது, எனக்கு மக்களுடன் மட்டுமே டீல் உண்டு” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

