Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்றும் பி.சி.ஆர்.பரிசோதனை

January 15, 2021
in News, Politics, World
0

கொரோனா வைரஸ் தொற்றினால் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழ்நிலை உருவாகியுள்ளமையினால்,  அவர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இன்றையத் தினமும், (15) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதனிடையே தொற்றுநீக்கும் நடவடிக்கை நிமித்தம் நாடாளுமன்றில் ஆளுங்கட்சியின் பிரதான அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று முன்தினமும் பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.

அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜெயசேகர, ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்குப் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர்களுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய 31 உறுப்பினர்கள், தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Previous Post

மஹர சிறை – 6 கோடிக்கும் அதிக சொத்துகளுக்கு சேதம்

Next Post

சிவனொளிபாதமலை சென்ற இருவர் கைது

Next Post

சிவனொளிபாதமலை சென்ற இருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures