கேகாலையில் களேபரத்தை ஏற்படுத்திய கொரோனா மருந்து தற்போது நாடாளுமன்றத்திற்கும் வந்து விட்டது.
கேகாலையை சேர்ந்த ஆயுர்வேத வைத்தியர் தம்மிக்க பண்டார கொரோனா தடுப்பு மருந்து தயாரித்ததாக தெரிவித்திருந்தார். அவரை அழைத்து மருந்தையும் ரேஸ்ற் பார்த்தார் சுகாதார அமைச்சர்.
சுகாதார அமைச்சரே பருகி விட்டாரே பிறகென்ன என, கேகாலையில் வைத்தியரின் வீட்டில் 10,000 இற்கும் அதிகமானவர்கள் குவிந்ததால் பெரும் சர்ச்சையேற்பட்டது. சர்ச்சை முற்றியதையடுத்து, கொரோனா மருந்து வழங்குவதை வைத்தியர் இடைநிறுத்தினார்.
இந்த நிலையில் ஆளும்கட்சி எம்.பி சிசிர ஜெயக்கொடியினால் வைத்தியர் தம்மிக்க பண்டார இன்று நாடாளுமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். இதன்போது ஏராளம் போத்தல் கொரோனா மருந்தும் கொண்டு சென்றிருந்தார்.
சபாநாயகருக்கும் ஒரு போத்தல் வழங்கினார். பல எம்.பிக்களும் முண்டியடித்துக் கொண்டு போத்தல்களை வாங்கியுள்ளனர். சபாநாயகரும் இன்று மருந்தை பழகியதாக செய்தி வெளியாகியுள்ளது.

