தன் மீதான மூன்று ஊழல் வழக்குகளை, ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்ற, பாக்., முன்னாள் பிரதமர், நவாஸ் ஷெரீபின், 67, கோரிக்கையை, பாக்., நீதிமன்றம் நிராகரித்தது.
அண்டை நாடான, பாகிஸ்தானின் பிரதமராக இருந்த, நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தார் மீது, தேசிய பொறுப்புடைமை நீதிமன்றத்தில், மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வழக்குகளை, ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்ற ஷெரீபின் கோரிக்கையை, பொறுப்புடைமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில், ஷெரீப் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த உயர் நீதிமன்றம், அவரது கோரிக்கையை நிராகரித்தது.