ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரினால் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் சிலருக்கு எதிராக கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப் பெறுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது ஐக்கிய தேசியக் கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் அல்லவெனவும், கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களினால் எடுக்கப்பட்ட தீர்மானம் எனவும் பிரதமர் அறிவித்துள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் 20 பேரின் ஒப்பத்தில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டிருந்தது. பிரதமரின் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 16 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மீதே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.