நட்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் விமானசேவையை குறுகிய காலத்திற்குள் இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றியமைப்பதற்கான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் புதிய பணிப்பாளர் சபைத்தலைவர் ரஞ்சித் பெர்னாண்டோ நேற்று நிறுவனத்தில் நடைபெற்ற செய்தியாளர் இதனை தெரிவித்தார்.
ரஞ்சித் பெர்னாண்டோ தலைமையிலான பணிப்பாளர் சபையின் உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். மறுசீரமைப்பின் மூலம் புதுப்பொலிவை ஏற்படுத்தி நிறுவனத்தை முன்னேற்றகரமாக செயற்படுவதற்கான மறுசீரமைப்பு ஆலோசனைகள் தற்பொழுது சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன் நிறுவனம் இந்த நாட்டின் தேசிய சொத்து. பொதுமக்கள் மத்தியில் தேசிய வளமாக இதனை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அத்தோடு பொதுமக்கள் மத்தியில் இது தொடர்பிலான ஈடுபாட்டை கட்டியெழுப்புவதே தமது பணிப்பாளர் சபையின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய சபையின் நோக்கம் செயற்திறன் மிக்க நிர்வாகத்தை முன்னெடுப்பதற்கு தேவையான ஆலோசனைகளை சபை வழங்கும்.
இந்த நிறுவனத்தை வர்த்தக ரீதியில் முன்னெடுப்பதே சபைக்கான பொறுப்பாகும் . இதற்கமைவாக சபையில் இத்துறையுடன் சம்பந்தப்பட்டவர்களும் அனுபவத்தை கொண்டவர்களும் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனா. திறைசேரி தேவையான நிதியை மறுசீரமைப்பிற்கு வழங்கும் என்று சபையின் உறுப்பினரும் நிதியமைச்சின் ஆலோசகருமான திரு மனோ தித்தவெல செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது இந்த நிறுவனம் பணிப்பாளர் சபை இ முகாமைத்துவம்இ நிர்வாகம் ஆகிய பிரிவின் கீழ் செயற்படுகின்றது. எமது பங்கு வர்த்தகரீதியில் சர்வதேச தரத்தில் நிறுவனத்தை மேம்படுத்துவதாகும். மறுசீரமைப்பின் மூலம் நிறுவனத்தின் நட்டத்தை சரிசெய்து இலாபகரமாக செயற்படுத்துவதே நோக்கமாகும். திறைசேரி இதற்கு தேவையான நிதியை வழங்கும் . ஆனால் நிதிக்குரிய பலன்கள் குறுகிய காலப்பகுதிக்குள் பெறுவதே இலக்காகும். இது கஸ்ரமான பணி. இருப்பினும் விமானங்களை ஒப்பந்த அடிப்படையில் செயற்படுத்தவதற்காகவும் கடந்த காலங்களில் கோடிக்கணக்கான ரூபா குத்தகை மற்றும் கடன்களாக பெறப்பட்டுள்ளன. இந்த கடன்களையும் குத்தகைகளையும் நிறுவனம் செலுத்தவேண்டியுள்ளது.
நிறுவனத்தின் தேவைக்கு மேலதிகமாக பணியாளர்கள் இருக்கின்றனர். தற்பொழுது 7000 பேர் பணியாற்றுகின்றனர் என்றும் ரஞ்சித் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.