நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் பற்றி சர்ச்சையான கருத்தை தைரியமாக கூறிய உதயநிதி ஸ்டாலின்
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராகவும் அதே சமயம் நடிகராகவும் திகழ்பவர் உதயநிதி ஸ்டாலின். சமீபத்தில் ஒரு பேட்டியில் தற்போது நடிகர் சங்கத்துக்கும், தயாரிப்பாளர் சங்கத்துக்கு சிறு பிரச்சனை பொய் கொண்டிருக்கிறது.
அதே நேரம் வருகிற தயாரிப்பாளர் சங்க தேர்தலில் சில நடிகர்களும் களம் இறங்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது, உங்களது ஆதரவு யாருக்கு இருக்கும் என்ற கேள்விக்கு ‘ யாருக்குமே இருக்காது, நான் கஷ்டப்படுற நேரத்தில் இரண்டு சங்கமும் எனக்கு உதவி செய்ய முன்வரவில்லை. அதற்கு பிறகு என் ஆதரவை எப்படி சொல்வேன், ஆனால் கண்டிப்பாக யாருக்கு ஒட்டு போடா வேண்டுமோ அவர்களுக்கு ஒட்டு போடுவேன்.
அதே போல் ஜல்லிக்கட்டு கேள்விக்கு, கண்டிப்பாக எங்களுக்கு ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என்பது தான் ஆசை அதற்கு எங்கள் முழு ஆதரவு இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.