அரசியல்வாதியும், நடிகருமான கருணாஸ் கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் ‘ஆதார்’ திரைப்படத்தின் வெளியிட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஆதார்’. இதில் நடிகர்கள் கருணாஸ், அருண் பாண்டியன், பிரபாகர், திலீபன் நடிகைகள் இனியா, ரித்விகா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருக்கிறார். எளிய மனிதனின் வாழ்வியலை பேசும் இந்த திரைப்படத்தை வெண்ணிலா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீடு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் செப்டம்பர் 22 ஆம் திகதியன்று பட மாளிகையில் ‘ஆதார்’ வெளியாகிறது.
இயக்குநர் இமயம் பாரதிராஜா உள்ளிட்ட தமிழ் திரையுலகின் மூத்த படைப்பாளிகள் பலரும் பாராட்டிய இந்த ‘ஆதார்’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடமும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.