சில கோரிக்கைகளை முன்னிவைத்து தொடருந்து நிலைய அதிபர்கள் நேற்று நள்ளிரவு முதல் தமது கண்காணிப்பு கடமைகளில் இருந்து விலகியுள்ளனர்.
திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்கள், ஆட்சேர்ப்பு முறைமையை துரிதமாக உருவாக்குதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி அவர்கள் இவ்வாறு கடமைகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
இதன்படி நேற்று நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்களுக்கு இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தொடருந்து நிலைய அதிபர்களின் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால், இந்த தொழிற்சங்க நடவடிக்கையை பணிப்புறக்கணிப்பாக முன்னெடுப்பதற்கும் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

