எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு விசேட கூட்டமொன்றை இன்று (10) நடாத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று காலை 10.00 மணிக்கு இக்கூட்டம் இடம்பெறவுள்ளது.
புதிய நடைமுறைகளின் கீழ் எதிர்வரும் தேர்தலை நடாத்துவதற்கு இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
உள்ளுராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் செய்தல், வாக்குக் கணக்கெடுப்பு, எல்லை நிர்ணயத்துக்கு ஏற்ப வாக்களிப்பு மத்திய நிலையங்களை அமைத்தல் போன்ற விடயங்களும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.
இக்கூட்டத்துக்கு பிரதி தேர்தல்கள் ஆணையாளர்கள், உதவித் தேர்தல்கள் ஆணையாளர்கள் உட்பட ஆணைக்குழுவின் அதிகாரிகள் ஆகியோர் இக்கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.