தேசிய சூரா கவுன்ஸிலின் பிராந்திய மட்ட கருத்தரங்கு இன்று (08) கஹட்டோவிட்டா கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபிஈ மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முஹம்மத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதமதிதிகளாக தேசிய சூரா சபை தலைவர் தாரிக் பத்தியுத்தீன் மஹ்மூத், சபையின் உப தலைவர்களுள் ஒருவரான அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பழீல், சபை உறுப்பினர் பேராசிரியர் ரீஸா யஹ்யா உட்பட தேசிய சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இன்று மாலை 3.30 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் கஹட்டோவிட்டா, ஓகொடபொல, உடுகொட ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பள்ளிவாயல் நிருவாகிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், புத்தஜீவிகள், உலமாக்கள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.