தினேஷ் சந்திமல், இலங்கை கிரிக்கெட் மற்றும் அதன் தொழில்நுட்பக் குழுவிடம் தேசிய அணியில் எனது எதிர்காலம் குறித்து தெளிவு படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திசர பெரேரா ஏற்கனவே ஓய்வு பெற்றுள்ளார். இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் ஓய்வு குறித்து ஆலேசித்து வருகிறார்.
இந் நிலையிலேயே தினேஷ் சந்திமாலின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்ப குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வாவுக்கு சந்திமல் எழுதியுள்ள கடிதத்தில், தனது திறமை தொடர்பில் கிரிக்கெட் தெரிவுக்குழுவுக்கு தெரியப்படுத்தல் மற்றும் எனது கிரிக்கெட் பயணத்தின் எதிர்காலம் தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்கு குவித்து விவாதிக்க குறித்த குழுவுக்கு சந்தர்ப்பம் ஒன்றை வழங்குமாறும் கோரியுள்ளார்.
அக் கடிதத்தில் சந்திமல், தனது மூன்று கிரிக்கெட் வடிவங்களிலும் தனது புள்ளி விவரங்களை கோடிட்டுக் காட்டியுள்ளார்.
“இந்த கடிதத்தில் கிரிக்கெட்டில் எனது கடந்தகால செயல்திறன் மற்றும் பிற கடந்த கால வீரர்களின் செயல்திறன் பற்றிய உண்மைகள் உள்ளன. இந்த உண்மைகளை குறிப்பிடுவதற்கான எனது ஒரே நோக்கம் எனது நிலைப்பாட்டையும் கிரிக்கெட்டில் எனது எதிர்காலத்தைப் பற்றிய உங்கள் நிறுவனத்தின் பார்வையும் உங்களுக்கு புரிய வைப்பதாகும்.
இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், வெள்ளை பந்து மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் இரண்டிலும் நான் வணங்கும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான தேர்வுக்கு நான் முற்றிலும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தனிப்பட்ட முறையில் உணர்கிறேன்.
எனது கிரக்கெட் புள்ளிவிவரங்களைத் தாண்டி, உடல்நலம் மற்றும் உடற்தகுதிக்கான எனது இணக்கம் மற்றும் இலங்கை கிரக்கெட் மீதான எனது நெறிமுறைத் தரங்கள் ஆகியவை மிக உயர்ந்தவை. நான் எப்போதும் சிறந்த அணி வீரராக திறன்களை நிரூபித்துள்ளேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.