தென்னாபிரிக்கா உயரிஸ்தானிகர் மாக்ஸ் அம்மையாருக்கும் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகல்லாகமவிற்குமிடையிலான சந்திப்பு நேற்று (12) பிற்பகல் ஆளுனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்தில் யுத்தத்திற்கு பின்னரான அபிவிருத்தி,தேசிய நல்லிணக்க விவகாரங்கள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் தென்னாபிரிக்காவின் முதலீட்டு முயற்சிகள் தொடர்பாக விரிவாக கலந்துறையாடப்பட்டது.
தேசிய நல்லிணக்கம் தொடர்பான தென்னாபிரிக்காவின் அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்து இந்த நாட்டின் இணங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் அதிகாரப்பரவலாக்கல் முயற்சிகளை கட்டியெழுப்புவதற்கு தென்னாபிரிக்கா தன்னாலான முழு உதவிகளை வழங்குமென தென்னாபிரிக்கா உயரிஸ்தானிகர் மாக்ஸ் அம்மையார் இதன் போது தெரிவித்தார்.
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான தென்னாபிரிக்காவின் முயற்சிகளை வரவேற்ற கிழக்கு மாகாண ஆளுனர் பல்லின மக்கள் வாழும் கிழக்கு மாகாணத்தின் எதிர்காலம் இணங்களுக்கிடையிலான நல்லுறவிலேயே தங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

