துருக்கி தாக்குதலில் உயிரிழந்த கனடிய பெண் அடையாளம் காணப்பட்டார்
துருக்கியில் புத்தாண்டு தினத்தில் இரவு களியாட்ட விடுதி தாக்குதலில் கொல்லப்பட்ட கனடிய பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெண், ஒன்ராறியோ மாநிலத்தை சேர்ந்த அலா அல்-முஹந்திஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வர்த்தக நடவடிக்கைகளுக்காக அவர் துருக்கிக்கு விஜயம் செய்திருந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த அனர்த்தத்திற்கு உள்ளானதாக அவரது கணவர் உறுதிபடுத்தியுள்ளார். குறித்த பெண் இரு பிள்ளைகளின் தாயார் ஆவார்.
மேற்படி துருக்கி தாக்குதலில் சுமார் 39 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களுள் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.