நயன்தாரா நடித்து வருகிற 28ம் தேதி திரைக்கு வரும் படம் ஐரா. சர்ஜூன் இயக்கியுள்ள இந்த படத்தில், முதன்முறையாக துணிச்சலான பெண், பயந்த சுபாவம் கொண்ட பெண் என இரண்டு விதமான வேடங்களில் நடித்துள்ளார் நயன்தாரா.
பயந்த சுபாவம் கொண்ட பெண்ணாக நடித்துள்ள வேடத்தில் உடம்பு முழுக்க கறுப்பு மேக்கப் போட்டு நடித்துள்ள நயன்தாரா, இதுவரை தான் நடிக்காத வித்தியாசமான கதாபாத்திரம் என்று கூறியுள்ளார்.
அதேசமயம் துணிச்சலான நிருபராக அவர் நடித்துள்ள வேடம் இதற்கு முன்பு அறம் படத்தில் அவர் நடித்த கலெக்டர் வேடம், இமைக்கா நொடிகளில் நடித்த சிபிஐ அதிகாரி வேடங்களைப்போன்று அழுத்தமான வேடம் என்று தெரிவித்துள்ளார் இயக்குனர் சர்ஜூன்.