மக்கள் அச்சத்துடன் வாழும் ஒரு சூழல் நாட்டில் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாதாள உலகக் கும்பல் இன்று தலைதூக்கியுள்ளது. இது தீவிரவாதத்தை விடவும் பயங்கரமானது எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த இரண்டு மூன்று வாரங்களில் குடும்பங்களுடன் பலர் கொலை செய்யப்பட்ட செய்திகளை அறிய முடிகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள இந்நிலை ஆபத்தானது எனவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.