தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட கொழும்பு, கோட்டை காவல்நிலையத்தில் சேவைகள் கிருமி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த காவல்நிலையத்தில் அமைந்துள்ள மேல் மாகாண சிறப்பு புலனாய்வுப் பிரிவில் சேவையாற்றும் ஒரு காவல்துறை உத்தியோகிஸ்தர் ஒருவர் நேற்று (21)கொரோனா தொற்றுக்குள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இவ்வாறு சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இதன் பின்னர் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கு காவல் நிலைய வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டதையடுத்து கிருமி நீக்கம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந் நிலையிலேலேய கொழும்பு, கோட்டை காவல் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.

