முன்னாள் முதல்வரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதி மறைவு மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் மறைவை அடுத்து திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் வெற்றிடம் நிலவி வருகின்றது.
இந்நிலையில் குறித்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நவம்பர் மாதத்தில் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
மேலும் தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலுடன் நாடு முழுவதும் வெற்றிடமாக இருக்கும் சட்டசபை தொகுதிகளின் இடைத் தேர்தல்களையும் நடத்தி முடிக்க தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.