திருகோணமலை பிரதேசத்தில் 7 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த நபர் ஒருவரை நேற்று (22) மாலையில் கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஸ்ரீமாபுர பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளை வைத்து விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, சந்தேக நபரை சோதனை செய்த போது 7 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் குறித்த நபர் கைது செய்யபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
போதைப் பொருளுடன் தொடர்புபட்ட பல வழக்குகள் சந்தேக நபருக்கு எதிராக நீதிமன்றங்களில் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.