அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாகாமம் வயல் வெளிப் பகுதியில் மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்த அனர்த்தமானது நேற்று சாகாமம் பெரியதலாவை வயல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் சாகாமம் பாடசாலை வீதியைச் சேர்ந்த 52வயதுடைய 6 பிள்ளைகளின் தந்தையான தம்பிமுத்து மோகனராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]