நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் திருகோணமலையில் தனித்து போட்டியிடுவதாகவும் இன்று(11)சில குறிப்பிட்ட பிரதேச சபை வேட்பு மனுவுக்கான கட்டுப்பணத்தையும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் திருமலை மாவட்ட அமைப்பாளருமான எம்.எஸ்.தௌபீக் தலைமையிலான குழுவினர் செலுத்தினர்.
இது வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மஹிந்த ராஜபக்சவின் பொதுஜனபெரமுன கட்சி உட்பட சில கட்சிகள் உள்ளூராட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை திருகோணமலை மாவட்டம் சார்பில் உதவித் தேர்தல் அத்தாட்சி அலுவலகத்தில் தனித்துப் போட்டியிடுவதற்கான கட்டுப்பணங்களை செலுத்தியுள்ள நிலையில் மிகுதியுள்ள முக்கிய கட்சிகளாக காணப்படுகின்ற ஐக்கிய தேசிய கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகள் திருகோணமலை மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலில் தனித்தா?கூட்டா?என்ற மிகுந்த எதிர்பார்ப்புக்களுடன் கட்சியின் போராளிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்கள்.
திருகோணமலையில் பல வட்டாரங்கள் காணப்பட்ட போதிலும் வேட்பு மனுக்கள் எவ்வாறு அமையப்போகின்றது என்பதையும் இதில் சில வேட்பாளர்களுக்கான தெரிவில் வெட்டு விலளாம் என்ற நிலையும் கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது.

