திருகோணமலை துறைமுகத்திற்கு அமெரிக்கவின் யுத்த கப்பலொன்று இன்று (24) காலை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
208 அடி நீளமான இக்கப்பலானது 2 ஹெலிகொப்டர் இறங்கு தளங்களை கொண்டிருப்பதுடன் 6 ஹெலிகொப்டர்களை வைத்திருப்பதற்கான இடவசதிகளையும் கொண்டுள்ளது.
இந்த கப்பலில் 33 அதிகாரிகள் உட்பட 900 கடற்படை வீரர்கள் பணியில் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இக்கப்பல் இம்மாதம் 28 ஆம் திகதி வரை திருகோணமலையில் இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.

