நேற்றுக் காலை இலங்கையின் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இராணுவ உயரதிகாரிகள் பயணம் செய்த வாகனம் ஒன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்துள்ளது.
மட்டக்களப்பு கல்லடி இராணுவ முகாமில் இருந்து, பனாகொட இராணுவத் தளத்துக்குச் சென்று கொண்டிருந்த போதே இந்தத் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த வாகனத்தில் மூன்று இராணுவ அதிகாரிகள் சென்றனர். தீப்பிடித்ததும், அவர்கள் வாகனத்தில் இருந்து குதித்து வெளியேறியதால், காயங்களின்றி உயிர் தப்பியுள்ளனர்.
இந்தத் தீ விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.