தாய்லாந்தில் தொடரும் இயற்கையின் சீற்றம்: 18 பேர் பலி
தெற்கு தாய்லாந்தில் கடந்த ஒருவாரமாக பெய்துவரும் கடுமழையால் 18 பேர் பலியாகிவுள்ளனர். சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிகப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளது.
தாய்லாந்தின் தெற்கு பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 1000க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மழை வெள்ளத்தினால் இதுவரை 18 பேர் பலியாகிவுள்ளனர்.
வெள்ளத்தால் போக்குவரத்து வசதிகள் இல்லது போயுள்ளன. மேலும் பாதிக்கப்பட்டோரை மீட்கும் நடவடிக்கைகள் துரித முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த கனமழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வழமையாக தாய்லாந்தில் நவம்பர் முதல் ஜனவரி வரை வறட்சி மிகு குளிர் காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ் வருடம் வழக்கத்துக்கு மாறாக தொடர் மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
.