தாயகத்து உறவுகளுக்கு உதவும் நோக்குடன் பிரித்தானிய இளையோரால் பொதுமக்களை ஒன்றிணைத்து BBQ உணவு உபசாரணை நிகழ்வு 20/08/2017 அன்று பிரித்தானியாவில் உள்ள கிங்ஸ்பெரி எனும் இடத்தில் நடாத்தப்படுகின்றது. கலந்துகொள்ளும் உணர்வாளர்களை உற்சாகமடையச்செய்வதற்காக துடுப்பாட்டம் கரப்பந்தாட்டம் போன்ற விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. இந்நிகழ்வில் பெறப்படும் நிதி அன்றைய தினமே தாயகத்து உறவுகளுக்கு அனுப்பப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் ஊடகங்களுக்கான அறிக்கையினை அனுப்பிவைத்துள்ளனர்.
வணக்கம்
இதுவரை அமைப்புகளுடனும் தனிப்பட்ட வகையிலும் இயங்கி வந்த நாங்கள் இணைந்து செய்யும் ஒரு முயற்சியே வருகிற 20 ஆம் திகதி நடக்க இருக்கும் #தமிழ்_மக்கள்_ஒன்றிணைவும்_BBQ_விருந்துணவும்
இந்த நிகழ்வை நாம் ஒருங்கிணைக்கும் நோக்கம் தாயக மக்களுக்கு தேவையான உதவியில் ஒரு சிறிய பங்களிப்பை செய்வதே ஆகும் . இந்த முயற்சி வெற்றி பெற்றால் இத்தகைய உதவி திட்ட செயல் திட்டங்களோ அல்லது பொதுவான வேலை திட்டங்களோ எம்மால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்
இதை தவிர வேறு நோக்கங்கள் எங்களுக்கு இல்லை .இதை நாம் செய்வது எந்த ஒரு அமைப்புக்கு எதிரானது என்பதோ அல்லது இதை செய்வதால் நாம் தனியே ஒரு அமைப்பை உருவாக்குகிறோம் என்பதோ அல்லது இனி அமைப்புகளுக்காக வேலை செய்யமாட்டோம் என்பதாகவோ அர்த்தமில்லை என்பதை உறுதிப்பட தெரிவிக்கின்றோம்.
எல்லா அமைப்புகளும் எதோ ஒரு வகையில் பல்வேறு வேலை திட்டங்களை செய்து வருகிறீர்கள் . உங்கள் வேலை திட்டங்கள் வெவ்வேறு அணுகுமுறைகளை கொண்டிருந்தாலும் எல்லோருடைய நோக்கமும் தமிழர்களின் நல்வாழ்வுக்கே என்பதனை புரியாதவர்கள் அல்ல நாங்கள் .
பல்வேறு விமர்சனங்களை முன் வைப்பது அமைப்புகள் பிழைகளை திருத்தி சரியான பாதையில் முன்னரை விட வேகமாக பயணிக்க வேண்டும் என்பதற்காகவே. நாங்கள் விமர்சனம் வைப்பது என்பது அமைப்பை உடைக்க வேண்டும் என்பதற்காக அல்ல
எங்களில் சிலர் கடும் வார்த்தைகள் கொண்டு விமர்சனம் முன் வைத்தார்கள் என்பதையும் நாம் மறுக்கவில்லை . ஆனால் அந்த வார்தைகைளின் பின்னே அவர்களிடம் இருக்கும் உணர்வு என்பதையும் நாம் கடந்து செல்ல முடியாது
அமைப்புகளால் முன்னெடுக்கபடும் வேலைத்திட்டங்கள் ,முயற்சிகள் என்பனவற்றுக்கு மத்தியில் தாயக மக்களின் உதவி திட்டங்களுக்கு அமைப்புகளால் தகுந்த நேரத்தில் தகுந்த உதவிகள் செய்ய முடியாதுள்ளது என்பதால் அந்த இடைவெளியை நிரப்ப எடுக்கும் ஒரு பரீட்சார்த்த முயற்சியே இது
எங்களின் இந்த முயற்சிக்கு மக்கள் ஆதரவு கிடைத்தால் அந்த ஆதரவுடன் கூடிய எங்கள் ஆதரவு உங்கள் எதிர்கால முயற்சிக்கு இருக்கும் .இல்லை என்றாலும் எங்கள் ஆதரவு வழமை மாதிரி அமைப்புகளுக்கான ஆதரவு தொடரும்
எனவே எங்களை இன்னொரு அமைப்பபாக பார்க்காமல் அமைப்புகளுக்கு எதிரானவர்களாக பார்க்காமல் எங்களுடைய இந்த முயற்சியை உங்கள் வீட்டு பிள்ளைகளின் முயற்சியாக பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள்
உங்கள் அனுபவங்களுடன் கூடிய ஆலோசனைகளையும் உதவிகளையும் நாங்கள் வேண்டி நிக்கிறோம் .
எனவே வரும் 20 ஆம் திகதி எம்மால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள நிகழ்வுக்கு வருகை தந்து தாயக மக்களின் உதவிக்கான திட்டத்தோடு கைகோருங்கள்
நன்றி
இளையோர் ஏற்பாட்டுக்குழு
பிரித்தானியா.

