ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்த வேண்டுமாக இருந்தால் அக்கட்சியின் பொறுப்புக்களிலுள்ள மாட்டுக் கூட்டத்தை வெளியேற்றிவிட வேண்டும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பேரேரா தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
நாம் கட்சியில் இருக்கும் போது ஒரு மாட்டை விலக்கியே அந்த இடத்துக்கு ரோஹண பியதாசவைக் கொண்டு வந்தோம். பின்னரும் அந்த இடத்துக்கு பதில் செயலாளராக இப்போதும் ஒரு மாடு வந்துள்ளதாகவும் அவர் சாடினார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக்கு ராஜபக்ஸாக்களில் ஒருவர் வந்தால், இரு கட்சிகளுக்கும் இடையிலுள்ள பிரச்சினை தீர்ந்து விடும் எனவும் அவர் மேலும் கூறினார்.