அமெரிக்காவின் டெக்சாஸில் கொள்ளையர்கள் ஒரு தம்பதியை கொடூரமாகத் தாக்கிவிட்டு காரை ஏற்றிக் கொலை செய்ய முயலும் காட்சிகள் வெளியாகியுள்ளது. அந்நாட்டு நேரப்படி கடந்த வெள்ளிக்கிழமை அன்று டெக்சாஸில் 75 ஆயிரம் டாலர்கள் பணத்தை வங்கியிலிருந்து எடுத்துக்கொண்டு கடைக்குச் சென்ற பெண்ணின் கைப்பையை பறிக்க வழிப்பறிக் கொள்ளையன் முயற்சித்தான். ஆனால் அப்பெண் பிடியை விடாததால் தரதரவென இழுத்துச் சென்றிருக்கிறான்.
அப்பெண்ணின் கணவர் வந்து தாக்கியும் விடாத நிலையில் சில நிமிடங்கள் சண்டை நீடித்தது. அதன்பின் காரில் வந்த மற்றொரு கொள்ளையன் தம்பதியை கொடூரமாக உதைத்து, காரை அவர்கள் மீது ஏற்றி கொலை செய்ய முயற்றி செய்துள்ளார்.