Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழ் மக்கள் கோரும் அரசியல் தீர்வை வழங்குவது அவசியம்

November 1, 2017
in News, Politics
0

நாட்டை அழி­வுப்­பா­தைக்குக் கொண்டு செல்­லா­மல், தமிழ் மக்­கள் வேண்டி நிற்­கின்ற அர­ச­மைப்­புத் தீர்வை வழங்­க­ வேண்­டி­யது அர­சின் பொறுப்­பா­கும். அதனை இனி­யும் இழுத்­த­டிக்க முடி­யாது.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­மோ­கன் தெரி­வித்­தார்.
இடைக்­கால அறிக்கை மீது அர­சி­யல்­நிர்­ணய சபை­யில் நேற்று நடை­பெற்ற விவா­தத்­தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

தமிழ் மக்­களை ஆயு­தம் ஏந்த வைத்­த­வர்­கள் யார்? இனி­மே­லும் இவ்­வா­றான நிலமை ஏற்­ப­டக் கூடாது. தமிழ் மக்­கள் வேண்டி நிற்­கின்ற அர­ச­மைப்­புத் தீர்வு அவ­சி­ய­மா­கும்.

இது தொடர்­பாக இலங்கை அர­சும், பன்­னாட்­டுச் சமூ­க­மும் இணைந்து சிறப்­புத் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. இது பன்­னாட்­டுச் சமூ­கத்துக்காக நிறை­வேற்­ற­ வில்லை. எமது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக நிறை­வேற்­றப்­பட்­டது.

நாட்டு மக்­கள் ஏற்­றுக்­கொள்­ள­தக்க, சிறுப்­பான்­மை­யி­னர் மீது ஆதிக்­கம் செலுத்­தாத கொள்கை தயா­ரிக்க வேண்­டி­யுள்­ளது. இதற்கு எதி­ராகச் சுய­ந­லக் கொள்­கை­யு­டன் செயற்­பட்­டால் எதிர்­கா­லத்­தில் நாட்­டில் கறை­ப­டிந்த சூழல் உரு­வா­கு­வ­தற்குப் பொறுப்­பா­ன­வர்­கள் தற்­போ­தைய அர­சி­யல் தலை­வர்­கள் என்­ப­தை மறந்து விடாதீர்­கள்.

தமிழ் அர­சி­யல் கைதி­க­ளுக்குப் பொது மன்­னிப்பு வழங்­கப்­படவேண்­டும். அர­சி­யல் கைதி­களை விடு­வித்­தால் வாக்குக் கிடைக்­காது என்று அரசு அஞ்­சு­ கின்­றதா? வாக்­கு­க­ளைப் பார்த்து செயற்­பட்­டால் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடி­யாது.

ஊட­க­வி­ய­லா­ளர்­கள் கடத்­தல், கொலை­கள் மற்­றும் ஏனைய கொலைச் சம்­வங்­க­ளுக்கு எதி­ராக இன்­னும் நீதி நிலை நாட்­டப்­ப­ட­வில்லை. அனைத்­தும் தாம­தப் போக்­கில் உள்­ளன. இது மக்­கள் மத்­தி­யில் விமர்­ச­னத்­திற்­கு­ரிய கார­ண­மாக அமைந்­துள்­ளது.
காணி­கள் அனைத்­தும் விடு­விக்­கப்­பட வேண்­டும்.

இந்த விட­யத்­தில் தமிழ் மக்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ளது. அத்­து­டன் வன திணைக்­கள அதி­கா­ரி­க­ளின் செயற்­பாடு மோச­மாக உள்­ளது. புதிய வன திணைக்­க­ளத்­தின் எல்லை நிர்­ண­யங்­கள் உறு­திப்­ப­டுத்த வேண்­டும். மகா­வலி அதி­கார சபை மூவின மக்­க­ளுக்குச் சார்­பாக நடக்க வேண்­டும். வேறு இனக் குடி­யேற்­றங் ­கள் செய்­யப்­படக் கூடாது.

வடக்கு – கிழக்கு தமிழ் ‍பேசும் மக்­கள் வாழும் பகு­தி­யா­கும். 13ஆவது திருத்­தம் மூலம் குறித்த மாகா­ணங்­கள் இணைக்­கப்­பட்­டன. வடக்கு – கிழக்கு தாமா­கவே இணை­வ­தற்கு இட­ம­ளிக்க வேண்­டும்.

இந்த விட­யத்­தில் கொழும்பு அரசு பலாத்­கா­ரம் செய்­யக் கூடாது. இனப்­ப­டு­கொலை என்ற அசிங்­கம் இந்த நாட்­டில் இடம்­பெற்­றது. நாம் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து அர­ச­மைப்பை உரு­வாக்க முன்­வர வேண்­டும் – – என்­றார்.

Previous Post

மதுபோதையில் வாகனம் செலுத்திய மூவருக்கு தண்டம் !!

Next Post

கோப்பாயில் ஆணின் சடலம் மீட்பு

Next Post
கோப்பாயில் ஆணின் சடலம் மீட்பு

கோப்பாயில் ஆணின் சடலம் மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures