Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனியே வியாழேந்திரனை நம்பி இந்த அரசாங்கம் இல்லை

December 13, 2020
in News, Politics, World
0

தனியே வியாழேந்திரனை நம்பி இந்த அரசாங்கம் இல்லை. காரணம் 156 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு பலம் பொருந்திய அரசாங்கமாக இந்த அரசாங்கம் திகழ்கின்றது. நாங்கள் நாளை வெளியேறினால் அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. 3 லெட்சதிற்கு மேற்பட்ட தமிழ் வாக்காளர்கள் மட்டக்களப்பிலே உள்ளார்கள். ஆனால் எமக்குக் கிடைத்த வாக்குகள் 33 ஆயிரம் வாக்குகள்தான். கிழக்கு மாகாணத்திற்கும், ஒரு இராஜாங்க அமைச்சர் போதாது. மக்களின் தேவைகளை நாடிபிடித்துப் பர்த்துக் கொடுப்பவன்தான் மக்கள்தலைவனாக இருக்க முடியும். பலர் தற்போது தமிழர்களின் கல்லறைகளில் ஏறிநின்று வீரவசனம் பேசுகின்றார்கள். விடுதலைப் போராட்டத்தை அன்றிலிருந்து இன்றுவரை ஒரு சொல்கூட நான் கொச்சைப்படுத்திப் பேசவில்லை. என இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக்கான மகளிர் மகாநாடு மட்டக்களப்பு பெரியபோரதீவில் அமைந்துள்ள தனியார் விடுதியில் சனிக்கிழமை (12) மாலை இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திராகுமார் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவி ச.காந்தரூபி, மற்றும் பொதுமக்கள் என பலர் இதன்பேது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர்….

மக்களை மக்கள் தலைவர்கள் பிளையாக வழிநடாத்தக்கூடாது. மக்கள் தலைவர்கள் கால சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு மக்களுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பவர்களான இருத்தல் வேண்டும். தற்போது இந்த மாகாணத்திலே 58.9 வீதமாக இருந்த தமிழ் சமூகம் 38.6 வீதத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த மாகாணத்திலே வளங்கள் ரீதியாக ஏனைய சமூகங்களொடு ஒப்பிடும்போது முன்னேற்றகரம் அடையாத சமூகமாக நாம் காணப்படுகின்றோம். இந்நிலையில் அரசியல் ரீதிகாகவும் ஏனைய சமூகத்திற்கு இணையாக நாங்கள் உருவாக்க வேண்டும்.

தமிழ்ர்களுக்குப்பிரச்சனை இருக்கின்றது. ஆனால் அதற்கு தீர்வு என்ன? தமிழர்களுக்கு நிரந்தரமானதொரு அரசியல் தீர்வு தேவை. ஆனால் அதனை அடைவதற்கு நாங்கள் எதைக் கையில் எடுத்திருக்கின்றோம். கடந்த நான்கரை வருடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாதுகாத்தது. அதன்மூலமாக தமிழ் மக்களுக்கான எந்த விடையத்தையும் அவர்களால் பெற்றுக்கொடுக்க முடிந்திருக்கவில்லை.

விடுதலைப் போராட்டத்தில் மரணித்தவர்களின் கனவலை நனவாக்க தற்போது யாரும் முயற்சிப்பதில்லை. மாறாக அவ்வாறு மரணித்தவர்களை வைத்து அரசியல் செய்கின்றார்கள். வடக்கு கிழக்கிலே ஒரு லெட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பவர்கள் உள்ளார்கள். மட்டக்களப்பில் மாத்திரம் 36000 உள்ளார்கள், 8000 பேர் மாற்றுத்திறனாளிகள் உள்ளார்கள்.

பெண்களைத் தெய்வமாக வழிபடுகின்ற தமிழ் சமூகம், தற்போது தமிழ் பெண்கள் கடைகளிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும், கையேந்தி நிற்கின்றார்கள். இந்த நாட்டிலே 53 ஆயிரம் போர் மத்தியகிழக்கு நாடுகளிலே இங்கு மீண்டும் வரமுடியாமல் இருக்கின்றார்கள். ஒரு சமூகம் இன்னொரு சமூகத்திடம் தலைகுநிந்து நிற்பத வேதனைக்குரிய விடையமாகும். இதனை மாற்ற வேண்டும். எனவே தமிழ் சமூகத்தை சமூக பொருளாதார ரீதியாக முன்னேற்ற உரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

முஸ்லிம்கள் அபிவிருத்திக்காகப் போராடி அவர்களின் எந்த உரிமையையும் இந்த மாகாணத்தில் இழந்ததில்லை. மாறாக எமக்கு உரிமையும் இல்லை, அபிவிருத்தியும் இல்லாமலுள்ளோம். இதுதான் உண்மை. கிராமிய அபிவிருத்தியைக் கட்டியெழுப்பவதற்கு வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழிவுகள் வைக்கப்பட்டுள்ளது. மக்களை நானாக இருந்தாலும் தொடர்ந்து ஏமாற்றமுடியாது. என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

Previous Post

விடுதலையானவுடன் தம்பியை கொலை செய்த அண்ணன்

Next Post

சமீபத்தைய நாட்களின் தரவுகளின் படி சாய்ந்தமருது முடங்கும் அபாயம்

Next Post

சமீபத்தைய நாட்களின் தரவுகளின் படி சாய்ந்தமருது முடங்கும் அபாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures