Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனியார் பேரூந்தினை கடத்துச் செல்ல முற்பட்ட நபர் பிடிபட்டார்

December 1, 2017
in News
0
தனியார் பேரூந்தினை கடத்துச் செல்ல முற்பட்ட நபர் பிடிபட்டார்

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணிகளை ஏற்றி இறக்கும் சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்தினை கடத்துச் செல்ல முற்பட்ட ஓர் பொம்மைவெளியை சேர்ந்த ஒருவர் மடக்கிப்பிடித்து பொலிசார் ஒப்படைக்கப்பட்டார்.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதன்போது யாழ்ப்பாணம் கொட்டடிப்பகுதியில் வைத்தே குறித்த பேரூந்து மீட்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவது ஈ.ஆர். 7811 இலக்க மன்னார் மாவட்டத்திற்குச் சொந்தமான பேரூந்து மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணிகளை ஏற்றி வந்த நிலையில் பயணிகள் அனைவரையும் இறக்கி விட்டு காத்திருப்பு நேரத்தில் குறித்த பேரூந்து யாழ்ப்பாணம் முற்றைவெளிப் பகுதியில் கொண்டு சென்று பேரூந்தினை நிறுத்திவிட்டு சாரதியிம் நடத்துநரும் மதிய போசணத்திற்காக உணவகம் ஒன்றிற்குச் சென்றுள்ளனர்.
இதனை அவதானித்த பொம்மைவெளிப் பகுதியை சேர்ந்த ஓர் இளைஞர் பேரூந்து தருப்பு நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த குறித்த பேரூந்தினை திறப்பு இன்றி களவாடிச் சென்ற சமயம் ஒர் சகதியில் பேரூந்து புதையுண்ட காரணத்தினால் வகையாக மாட்டிக்கொண்டார்.
இவ்வாறு பேரூந்து புதையுண்ட சமயம் அப்பகுதியால் பயணித்த ஏனைய பேரூந்து உரிமையாளர்கள் பேரூந்தின் சாரதியோ அல்லது நடத்துநரோ இன்றி பிறிதொருவர் பேரூந்தினை செலுத்துவதனைக்கண்டு சந்தேகமடைந்து சாரதிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்தபோதே சாரதி நிலமையை அறிந்து சம்பவ இடத்திற்கு ஓடிச் சென்றார். இதன்போது பேரூந்தினை களவாட முயன்றவர் கையும் களவுமாக வகையாக மாட்டிக்கொண்டார்.
இதனால் அகப்பட்ட திருடன் நன்கு கவனிக்கப்பட்ட நிலையில் சாரதி மற்றும் நடத்துநர்களால் பொலிசாரை அழைத்து பேரூந்தினை களவாட முயன்றவரை ஒப்படைத்தனர்.
பணம் , நகை , சைக்கிள் , மோட்டார் சைக்கிள் எனக் களவாடியவர்கள் மத்தியில் யாழ் நகரில் பட்டப்பகலில் பேரூந்தினையும் களவாட முயன்றமை பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. –

Previous Post

யாழில் 3 இளைஞர்கள் அதிரடியாக கைது!!

Next Post

நடுவானில் விமானத்திற்கு, எரிபொருள் நிரப்பிய இந்திய விமானப்படை

Next Post

நடுவானில் விமானத்திற்கு, எரிபொருள் நிரப்பிய இந்திய விமானப்படை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures