தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறை தொடர்பான புதிய திருத்தம் வெளியிடப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், இன்றைய தினத்திற்குள் அதனை வெளியிடுவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களின் தனிமைப்படுத்தல், கால எல்லையில் மாற்றம் ஏற்படுத்தல் மற்றும் கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுக்கொண்டுள்ள நிலையில் நாட்டிற்குள் பிரவேசிப்பவர்களுக்கு தனிமைப்படுத்தல் செயற்பாடு இன்றி பி.சி.ஆர் பரிசோதனை மாத்திரம் மேற்கொள்ளுதல் போன்ற விடயங்களில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார விதிமுறைகள் குறித்த விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் கொரோனா தடுப்பு செயலணியின் தலைவர் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

