நீதிமன்ற கட்டளையை மீறி பொத்துவில் பொலிகண்டி பேரணியில் கலந்து கொண்டமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கத்திடம் மாங்குளம் காவற்துறையினர் நேற்றையதினம் விசாரணை மேற்கொண்டனர்.
முன்னதாக மாங்குளம் காவல் நிலையத்துக்கு வருமாறு அவருக்கு காவற்துறையினரால் அழைப்புவிடுக்கப்பட்ட நிலையில் நேரமின்மையால் அங்குவர இயலாது என தெரிவித்திருந்தார்,
அதற்கமைய வவுனியாவில் அமைந்துள்ள ரெலோவின் மாவட்ட அலுவலககத்துக்கு நேற்றையதினம் வருகைதந்த காவற்துறையினர் அவரிடம் விசாரணையை மேற்கொண்டனர்.
இதன்போது தமிழ் மக்களின் உரிமை கோரிய நியாயமான ஜனநாயக போராட்டத்தில் அவர்களின் பிரதிநிதிகள் என்றவகையில் மக்களோடு இணைந்து கலந்து கொண்டதாக விளக்கத்தை தெரிவித்திருந்தார். இதேவேளை நீதிமன்றின் தடை உத்தரவு பத்திரத்தை நான் எந்த சந்தர்ப்பத்திலும் பெற்றுக்கொள்ளவில்லை என்றும், அது எனக்கு வழங்கப்படவில்லை என்றும் அவர் காவற்துறையினரருக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

