உலகமெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழர்கள் நவம்பர் 27ஆம் திகதியன்று தமிழ் மக்களுக்காக போராடிய மாவீரர்களை நினைவு கூர்வது வழமையாகும்.
அந்த வகையில் இலங்கையில் உயிர்நீத்த மாவீரர்களுக்கான அஞ்சலியை சற்று முன்னர் வடக்கு,கிழக்கு மக்கள் அனைவரும் வீட்டில் விளக்கேற்றி நினைவு கூர்ந்துள்ளனர்.
நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை விதித்ததன் காரணமாகவே இவ்வாறு அவர்கள் வீட்டில் விளக்கேற்றி அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.
மாவீரர் தினத்தையொட்டி இன்று வவுனியா,மன்னார் முல்லைத்தீவு ஆகிய இடங்களில் பொலிசார் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டும் மக்கள் தமது அஞ்சலியை வீடுகளில் இருந்தவாறே செலுத்தியுள்ளனர்.
இதேவேளை இவ் வீரர்களுக்கான நினைவேந்தலை புலம்பெயர் நாடுகளில் இருக்கும் மக்கள் சிறப்பாக ஒழுங்கமைத்து கொண்டாடி வருகின்ற புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

