அமெரிக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், வெப்பமண்டலத்தில் உருவாகியுள்ள புயல் சின்னத்தின் காரணமாக கடுமையான மழைப் பொழிவு ஏற்பட்டு வருகிறது.
இந்த மழையால் டெக்ஸாஸ் மாகாணத்தின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
வீடுகள் நீரில் மூழ்கியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் விமானங்கள் மிதந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
விமான நிலையங்களிலும் 5 அடி முதல் 12 அடிவரை தண்ணீர் உயர்ந்துள்ளது.