Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

டுபாயில் ஆரம்பமான ‘பெயார் பிரேக்’ தொடரில் சமரி அத்தப்பத்து முதலாவது சதம் அடித்து சாதனை

May 5, 2022
in Sports
0
டுபாயில் ஆரம்பமான  ‘பெயார் பிரேக்’  தொடரில் சமரி அத்தப்பத்து முதலாவது சதம் அடித்து சாதனை

மகளிர் கிரிக்கெட்டை முன்னேற்றத்திற்காக நடத்தப்பட்டு வரும் ‘பெயார் பிரேக்’ அழைப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பெல்கொன்ஸ் மகளிர் அணிக்காக விளையாடி வரும் இலங்‍கை கிரிக்கெட் அணித்தலைவியான சமரி அத்தபத்து முதலாவது சதமடித்து சாதனை படைத்தார்.

முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 90 கிரிக்கெட் வீராங்கனைகள் கிரிக்கெட் விளையாட்டை மென்மேலும் ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டு 6 அணிகள் பங்கேற்கும் ‘பெயார் பிரேக்’ ( FAIR BREAK) இருபதுக்கு 20 மகளிர் கிரிக்கெட் தொடர் நேற்று (04) துபாயில் ஆரம்பமானது.

இப்போட்டித் தொடரின் அனைத்துப் போட்டிகளும் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மே 4-15 வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், நேற்றைய தினம் ஆரம்பமான இப்போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் வோரியர்ஸ் வுமன் அணியை எதிர்த்தாடிய பெல்கொன்ஸ் மகளிர் அணி சமரி அத்தபத்துவின் அதிரடி சதத்தின் உதவியுடன் 8 விக்கெட்டுக்களால் அபார வெற்றியை ஈட்டியது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய வோரியர்ஸ் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 177 ஓட்டங்களை குவித்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பில் ஜோர்ஜியா ரெட்மெய்ன் ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களையும், ஹேலி மெத்தியூஸ் 58 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாகப் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் மரிக்‍கோ ஹில், சோர்னரின் திப்போச் இருவரும் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

178 ஓட்டங்களை வெற்றி இலக்காக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடுவதற்காக பெல்கொன்ஸ் மகளிர் அணி சார்பில் அணித்தலைவி சுசீ பேட்ஸ் மற்றும் சமரி அத்தபத்து ஆகியோர் ஆரம்ப ஜோடியாக களமிறங்கியது.

இவர்கள் இருவரும் எதிரணி பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்யும் விதமாக சிக்ஸர்கள் , பவுண்டரிகள் என விளாசியிருந்தனர். இந்த‍ ஜோடி தமக்கிடையில் 133 ஓட்டங்களை பகிர்ந்திருந்தபோது 43 பந்துகளில் 60 ஓட்டங்களை பெற்ற சுசீ பேட்ஸ் ஆட்டமிழந்தார். சமரி அத்தபத்து 55 பந்துகளில் சிக்ஸர்கள் 13 பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 107 ஓட்டங்களை பெற்று தமது அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றினார்.

இப்போட்டியில் பெல்கொன்ஸ் அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்த நிலையில் 178 ஓட்டங்களை பெற்று 8 விக்கெட்டுக்களால் இலகுவான வெற்றியை ஈட்டியது.

Previous Post

உகண்டாவில் பஸ் விபத்து | 20 பேர் பலி

Next Post

போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

Next Post
போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உபகுழு கூட்டம்

July 10, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமித்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் | சுனில் ஹந்துனெத்தி 

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures