ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்த ‛பிங்க்’ படம், தமிழில் அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ‛நேர் கொண்ட பார்வை’ என்ற பெயரில் உருவானது. டாப்சி நடித்த வேடத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். இப்படம் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், தற்போது பிங்க் படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்கின்றனர். வேணு ஸ்ரீராம் இயக்கும் இப்படத்தில் அமிதாப் வேடத்தில் பவன் கல்யாண் நடிக்கிறார். தில்ராஜூ உடன் இணைந்த போனிகபூர் தயாரிக்கிறார். இந்த படத்தில் டாப்சி நடித்த வேடம் முக்கியத்துவமானது என்பதால், அந்த வேடத்தில் நடிக்க பல நடிகைகளை பரிசீலணை செய்து வந்தவர்கள், இப்போது பூஜா ஹெக்டேவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.