ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைகள் மாநாடு இன்று ஆரம்பமாகின்றது.
இம்முறை மாநாட்டின் போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஆகியோருக்கு எதிரான நடவடிக்கைகளை புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச நீதிமன்றத்தில் இவர்களைக் குற்றவாளிகளாக இனம்காட்டி கைது செய்யுமாறு சர்வதேசத்தைத் தூண்டுவது இப்புலம்பெயர் புலிகள் அமைப்பின் நோக்கமாகும் என தேசிய சகோதர நாளிதழொன்று அறிவித்துள்ளது.
இம்முறை மாநாட்டில் 17 புலம்பெயர் புலிகள் அமைப்புக்களும், புலிகள் அமைப்பின் 30 செயற்பாட்டாளர்களும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அச்செய்தியில் கூறப்படுகின்றது.

