எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளர் ஒருவரை நியமிக்கவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றில் நேற்று (சனிக்கிழமை) ஒலிபரப்பான நிகழ்ச்சியில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தவிர, கூட்டமைப்பிலிருந்தும் வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளாரா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அல்லது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் வேட்பாளரை நியமிக்க முடியும் எனவும் தமக்கு இரு வழிகள் காணப்படுவதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன் கூட்டமைப்பின் ஊடாகவும் வேட்பாளரை நிறுத்துவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.

