மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட ஆணைக்குழுவினால் ஜெனிவாவில் அரசாங்கத்திற்கு எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை. இந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சர்வதேச சமூகம் கவனத்தில் கொள்ளப்போவதுமில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதியின் ஆணைக்குழு முழுக் கேலிக்கூத்து எனவும் அவர் விமர்சித்தார்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தகால மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராயவும், எதிர்வரும் பெப்ரவரி -மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை சமாளிக்கவும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட ஆணைக்குழு குறித்து தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்

