இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை வீதி விபத்துக்களால் 500 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் வீதி விபத்துக்களால் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்று காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிப் காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதேவேள, கிளிநொச்சி − பளைப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காரொன்றும், லொறியொன்றும் மோதுண்டு இந்த விபத்து நேர்ந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
விபத்தில் தந்தை மற்றும் இரு மகன்மாரே உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

