மட்டக்களப்பு மகிழுர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த சிறுவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த இளைஞன் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மின்கம்பத்தில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெரியகல்லாறு, காளிகோயில் வீதியை சேர்ந்த ஜெ.கேதுசன் (13வயது) எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவனின் உயிரிழப்பு காரணமாக பெரியகல்லாறு கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

