Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

செவிடன் காதில் ஊதிய சங்கு போன்றே அரசாங்கம் உள்ளது – ஹர்ஷன ராஜகருணா

April 25, 2022
in Sri Lanka News
0
செவிடன் காதில் ஊதிய சங்கு போன்றே அரசாங்கம் உள்ளது – ஹர்ஷன ராஜகருணா

அரசாங்கத்தை பதவி விலகுமாறு மக்கள் கோரி வருகின்றனர். ஆனால் அரசாங்கமோ செவிடன் காதில் ஊதிய சங்கு பேன்று செயற்படுகின்றது.

அதனால் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.

கம்பஹா பிரதேசத்தில் அமைந்திருக்கும் கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தை பதவி விலகுமாறு தெரிவித்து நாடுபூராகவும் மக்கள் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

என்றாலும் அரசாங்கம் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்று எதுவும் தெரியாது போல் இருந்து வருகின்றது.

அதேநேரம் போராட்டங்களை அடக்குவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது.

பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த, பொலிஸார் வீதித்தடைகளை ஏற்படுத்தியதுடன் அந்த வீதித்தடைகளில் கறுப்பு பொலித்தீன் உறைகளால் மறைக்கப்பட்ட இரும்பு கூர்களும் பொருத்தப்பட்டிருந்தன.

இது மிகவும் பயங்கரமான செயலாகும். ஆர்ப்பாட்டக்காரர்களின் கண்களில் அது குத்தினால், காலா காலமாக குருடராக இருந்திருக்க வேண்டி ஏற்பட்டிருக்கும்.

அத்துடன் அரசாங்கத்துக்கு எதிராக போராடும் மக்களை அடக்குவதற்கு அரசாங்கம் கடைப்பிடிக்கும் நடவடிக்கையானது விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கூட செய்யமாட்டார்.

அந்தளவு மோசமான முறையில் மக்களை அடக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

அரசாங்கம் எவவாறான அடக்குமுறைகளை கையாண்டாலும் நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை.

மேலும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று கிராமங்களில் இடம்பெறும் மரண வீடொன்றுக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.

இவ்வாறான நிலையில் நாட்டை முன்னுக்கு கொண்டுசெல்ல முடியாது. பொருட்களின் விலை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகரித்து செல்கின்றது.

அதனால் இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்கும் ஐக்கிய பாதயாத்திரை இன்று கண்டியில் ஆரம்பிக்கப்படுகின்றது.

கொழும்பு நோக்கி பயணிக்கும் இந்த பாதயாத்திரையில் கட்சி பேதங்களை மறந்து அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அத்துடன் நாடுபூராகவும் மக்கள் இந்த அரசாங்கத்தை பதவி விலகுமாறு தெரிவித்து வருகின்றபோதும் அரசாங்கம் அதுதொடர்பில் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றது.

அதனால் மக்களின் கோரிக்கைக்கு பலம் சேர்க்கும் வகையில் இந்த அரசாங்கத்தை அதிகாரத்தில் இருந்து வீழ்த்துவதற்கு, நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றை கொண்டுவர நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

நம்பிக்கையில்லா பிரேரணையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் தற்போது கைச்சாத்திட்டு வருகின்றனர்.

அரசாங்கத்தில் இருந்து எதிர்க்கட்சிக்கு வந்திருக்கும் 11கட்சிகளின் குழு, உண்மையாகவே அரசாங்கத்தை எதிர்ப்பதாக இருந்தால், நம்பிக்கையில்லா பிரேரணையில் கைச்சாத்திட முன்வரவேண்டும் என்றார்.

Previous Post

பங்களாதேஷ் குழாத்தில் மீண்டும் ஷக்கிப்

Next Post

இளம்பெண்ணை இரண்டாவது திருமணம் செய்யுமாறு மிரட்டிய சினிமா தயாரிப்பாளர் கைது

Next Post
இளம்பெண்ணை இரண்டாவது திருமணம் செய்யுமாறு மிரட்டிய சினிமா தயாரிப்பாளர் கைது

இளம்பெண்ணை இரண்டாவது திருமணம் செய்யுமாறு மிரட்டிய சினிமா தயாரிப்பாளர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures