Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

செல்வத்தை அள்ளித்தரும் மகாலட்சுமி விரத பூஜை

September 11, 2021
in News, ஆன்மீகம்
0
செல்வத்தை அள்ளித்தரும் மகாலட்சுமி விரத பூஜை

லட்சுமிதேவியை நாம் எப்பொழுதும் பூஜை செய்து கொண்டே இருந்தால்தான் அவள் நம் வீட்டில் வாழ செய்வாள். எப்பொழுதும் செய்ய முடியாதவர்கள் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம்.

செல்வத்திற்கு அதிபதி லட்சுமிதேவி. அந்த லட்சுமிதேவியின் கடைக்கண் பார்வை நம் மீது பட்டால்தான் நமக்கு செல்வம் கிடைக்கும். வெள்ளிக்கிழமை அன்று விரதம் இருந்து லட்சுமிதேவியை பூஜை செய்பவர் லட்சுமியின் அருளைப் பெறுவார்கள். நம்முடைய பெண் தெய்வங்கள்தான் கல்விக்கும், செல்வத்திற்கும் வீரத்திற்கும் உரியவர்களாக விளங்குகிறார்கள். கல்விக்கு அதிபதி, நாமகளான சரஸ்வதி. செல்வத்திற்கு அதிபதி அலைமகளான லட்சுமிதேவி வீரத்திற்கு அதிபதி பார்வதிதேவி. இவளே துர்காதேவியும் ஆவாள்.

எல்லா செல்வங்களும் நிரம்பி இருக்கும் இடத்தில் இருப்பவள் அஷ்டலட்சுமி. என்றாலும் எத்தனையோ லட்சுமிகள் இருக்கிறார்கள். ஆனந்தலட்சுமி, ஐஸ்வர்யலட்சுமி, ஜோதிலட்சுமி, அனந்தலட்சுமி என்று பல லட்சுமிகள் இருக்கிறார்கள்.

வெள்ளிக்கிழமைகளில் ஜோதியாக விளக்கு பூஜை செய்வார்கள். அதனால்தான் தூபலட்சுமி என்று அழைத்து வணங்குகிறோம். வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி பூஜை செய்யும்பொழுது தீபத்தில் பூக்களையோ, குங்குமத்தையோ போட்டு லட்சுமி அஷ்டோத்திரம் சொல்லலாம்.

அன்னபூரணி சிலையை வைத்து பூஜை செய்பவர்கள் ஒரு கிண்ணத்தில் சிறிது அரிசியை போட்டு அதில் அன்னபூரணி சிலையை வைத்து பூஜை செய்வார்கள். அரிசியை தானிய லட்சுமி என்றும், சாதமாக வடித்து விட்டால் அன்னலட்சுமி என்றும் கூறுவார்கள்.

அஷ்டலட்சுமிகளிலும் ஒவ்வொரு வகையிலும் நம் வாழ்விற்குரிய செல்வத்தையும், இன்பத்தையும், நிம்மதியையும் தேவையையும் பூர்த்தி செய்கிறாள். அன்னபூரணி சிலைக்கு அடியில் வைத்த அரிசியை மறுநாள் சமையலில் நாம் சேர்த்துக் கொள்ளலாம்.

பதவியைத் தருபவள் கஜலட்சுமி. குழந்தை பேற்றைத் தருபவள் சந்தானலட்சுமி. செல்வத்தை தருபவள் தான்ய லட்சுமி. வித்தையை தருபவள் வித்யாலட்சுமி. வீரத்தை தருபவள் வீரலட்சுமி. வெற்றியைத தருபவள் விஜயலட்சுமி.

லட்சுமிதேவியை நாம் எப்பொழுதும் பூஜை செய்து கொண்டே இருந்தால்தான் அவள் நம் வீட்டில் வாழ செய்வாள். எப்பொழுதும் செய்ய முடியாதவர்கள் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம்.

பலவகைகளிலும் லட்சுமி பூஜையை செய்தாலும் மகாலட்சுமி பூஜையை வருடத்திற்கு ஏழு முறைதான் செய்ய வேண்டும். இந்த பூஜையை செய்ய சில முறைகள் இருக்கின்றன.

திருமணமான பெண்கள்தான் மகாலட்சுமி பூஜையை செய்யவேண்டும். பிறந்த வீட்டில் இந்த பூஜையை செய்யும் வழக்கம் இருந்தாலும் புகுந்த வீட்டில் செய்யும் வழக்கம் இருந்தால்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அஷ்டோத்திர மந்திரங்களை சொல்லி பூ போட்டு பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிந்ததும் தேங்காய் உடைத்து வைக்க வேண்டும். பால், தயிர், சர்க்கரை பொங்கல், தேங்காய் பூரணம் அடைக்கப்பட்ட கொழுக்கட்டைகள், சாதம் இவைகளை நைவேத்தியம் செய்ய வேண்டும். பூஜையை பார்க்க வந்தவர்களுக்கு தாம்பூலமும் பிரசாதமும் கொடுக்க வேண்டும்.

http://Facebook page / easy 24 news

Previous Post

சிறுமியின் உயிரைப் பறித்த ஓட்டல் உணவு!

Next Post

கைதுசெய்யப்பட்டு காணாமலாக்கப்பட்ட மகனைத் தேடிய தந்தை மரணம்

Next Post
கைதுசெய்யப்பட்டு காணாமலாக்கப்பட்ட மகனைத் தேடிய தந்தை மரணம்

கைதுசெய்யப்பட்டு காணாமலாக்கப்பட்ட மகனைத் தேடிய தந்தை மரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures