முல்லைத்தீவுக் கடலில் சுருக்குவலை பயன்படுத்துவதைத் தடைசெய்யவேண்டும் என்று கள்ளப்பாட்டு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவுக் கடலில் சுருக்குவலைத் தொழிலால் உள் ளூர் மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர்பிலான கலந்துரையாடல் கள்ளப்பாடுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கலந்து கொண்டார்.
கள்ளப்பாடு மீனவர் சங்க மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், சுருக்குவலை பயன்படுத்தப்பட்டு வருவதால் உள்ளூர் மீனவர்களின் தொழில் பாதிக்கப்படுவதாக எடுத்துரைக்கப்பட்டது.
இனிமேல் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுருக்குவலை பயன்படுத்த அனுமதி வழங்கக்கூடாது என்பதையும் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை நாளை சனிக்கிழமை அனைத்து கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகளையும் அழைத்து கலந்துரையாடி இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறும் கள்ளப்பாடு கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.