“சில் ஆடை” வழக்குத் தீர்ப்பினால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டப் பணத்தை செலுத்துவதற்கான நிதி சேகரிப்பின் போது கலாநிதி மெதகொட அபதிஸ்ஸ தேரர் ஒரு மாத சம்பளத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் தனது முழுச் சம்பளமான 50 ஆயிரம் ரூபாவுக்கான காசோலையை வழங்கியுள்ளார்.
நேற்று (15) இந்த தண்டப் பணத்தை செலுத்துவதற்கான நிதி சேகரிப்பு ஊர்வலம் பிக்குகளினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொழும்பு கோட்டையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் பெருமளவிலான பிக்குகள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.