சிரியாவின் சமாதானத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாக ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரௌஹானி, துருக்கி ஜனாதிபதி ரஷிப் தையிப் எர்துகான் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புட்டின் ஆகியோர் இணைந்து அறிவிப்புச் செய்துள்ளனர்.
ஈரான் செய்திச் சேவையொன்று இதனைக் குறிப்பிட்டுள்ளது.
தற்பொழுது சிரியா நெருக்கடிக்கு தெளிவான அரசியல் தீர்வொன்றை தேடி தாம் மத்தியஸ்தம் வகித்து செயற்பட்டு வருவதாகவும் மூன்று ஜனாதிபதிகளும் தெரிவித்துள்ளனர்.
சிரியா அரசாங்கத்துக்கும் எதிர்க் கட்சி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் யுத்த நிறுத்தமொன்று நிலவிவருவதும் இம்மூன்று ஜனாதிபதிகளின் தலையீட்டினால் ஆகும் எனவும் குறிப்பிடப்படுகின்றது. இந்த யுத்த நிறுத்த அறிவிப்பின் போது சிரியாவிலுள்ள பொது மக்களுக்குத் தேவையான உதவிகளை துரிதமாக வழங்கி வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
ஈரான் ஜனாதிபதியும், ரஷ்ய ஜனாதிபதியும் தற்பொழுது துருக்கியின் அங்காரா நகருக்கு விஜயம் செய்துள்ளதாகவும் இவர்களது விஜயத்தின் பிரதான நோக்கம் சிரியாவுக்கு சமாதானத்தை பெற்றுக் கொடுப்பதாகவும் ஈரான் செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.